அறியாமல் செய்யும் தானம்
ADDED :1909 days ago
தோட்டத்தில் பழ மரங்கள் நட்டுள்ளார் ஒருவர்; இன்னொருவர் வயலில் நெல் பயிரிட்டுள்ளார். வேறொருவர் காய்கறிகளை பயிர் செய்துள்ளார். இவர்கள் விவசாயத்தின் மூலம் தானத்தில் ஈடுபடுகின்றனர். பயிரிட்ட காலத்திலும், அறுவடை காலத்திலும் பூச்சிகள், பறவைகள் பசியாறும். அறிந்தோ, அறியாமலோ செய்யப்படும் இந்த தானத்தின் பலன் இவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
“விளை நிலத்திலிருந்து பறவைகள் அல்லது பிராணிகள் தானியங்களைச் சாப்பிட்டால் அந்தந்த மனிதரின் கணக்கில் ஸதகா என்னும் தர்மமாக ஏற்கப்படும்’’