திருக்காமீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா
ADDED :1900 days ago
வில்லியனுார்; வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் நாளை அன்னாபிஷேக விழா நடைபெறுகிறது.
வில்லியனுாரில் உள்ள கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்துகொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதி நிறுத்தப்பட்டது. விழாக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, சிவாச்சாரியர்களின் கால பூஜைகள் மட்டுமே நடந்து வந்தது. இந்நிலையில் முதல் முறையாக இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியுடன் நாளை 30 ம் தேதி காலை 9:00 மணி அளவில் பஞ்சமூர்த்தி சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அன்று மாலை 6:00 மணிக்கு திருக்காமீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும் அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடக்கிறது.கொரோனா தொற்று காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும். சுவாமி தரிசனத்திற்கு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.