விஜய தசமியை முன்னிட்டு கும்மியாட்ட நிகழ்ச்சி
ADDED :1899 days ago
பல்லடம்: விஜய தசமியை முன்னிட்டு, பல்லடம் அருகே கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது. பல்லடம் அடுத்த அல்லாலபுரத்தில், ஆயுத பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. நிறைவு விழாவை முன்னிட்டு, முத்தையன் தோட்டத்தில், வள்ளி கும்மி ஆட்ட நிகழ்ச்சி நடந்தது. மங்கை வள்ளி கும்மி ஆட்ட ஆசிரியர் சண்முகசுந்தரம் தலைமையில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் கும்மியாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு கிராமப்புற பாடல்களுக்கு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இணை ஆசிரியர் சம்பத்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் வேலவன், மற்றும் தங்கவேல் ஆகியோர் பாடல்களை பாடி கும்மி ஆட்டத்தை ஒருங்கிணைத்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக, நீண்ட நாட்களுக்கு பின், சமூக இடைவெளியுடன் கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது.