உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி கிரிவலம் ரத்து

திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி கிரிவலம் ரத்து

 திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். கொரோனா தடை உத்தரவு நீடிப்பதால் நாளை (அக்., 31) பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும். நாளை வழக்கம் போல் மூலவர் சத்தியகிரீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடக்கும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை என சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !