உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜயவாடா செல்லும் அவிநாசி நந்தி சிலை

விஜயவாடா செல்லும் அவிநாசி நந்தி சிலை

 அவிநாசி: ஆந்திராவில் உள்ள சிவன் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, அவிநாசியில் நந்தி சிலை செதுக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில், பிரசித்தி பெற்ற நந்தீஸ்வரர் சிவாலயம் உள்ளது. இக்கோவிலில், பெரிய அளவில், நந்தி சிலை பிரதிஷ்டை செய்ய திட்டமிட்ட கோவில் நிர்வாகத்தினர், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள சிற்பக்கலை கூடத்தை அணுகினர். சிற்ப கலைஞர்கள், ஆறு மாதங்களாக, நந்தி சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிற்பி பூபதி கூறுகையில், ஊத்துக்குளி கல்லில் செதுக்கப்படும் சிலை, உயிரோட்டத்துடன் இருக்கும் என்பதால், பிற மாநிலத்தவர் கூட, இங்கு சிலை செய்து வாங்கி செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.ஆந்திராவுக்கு, இதுவரை, மூன்று நந்தி சிலைகளை அனுப்பியுள்ளோம். இந்த சிலை, 12 நீளம், 8 அடி உயரம், 1.5 டன் எடை கொண்டது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !