ஐயப்ப சுவாமி கோவில் ஆறாம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா
ADDED :2075 days ago
வெள்ளகோவில் : வெள்ளகோவில் குமாரவலசு, சாலையில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோவில், ஆறாம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலை கணபதி ஹோமம், ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமிக்கு 108 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதன்பின், தங்க கவசத்தில், ஸ்ரீ ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.