முக்தி நிலைய வளாகத்தில் மகா கும்பாபிஷேகம்
ADDED :1859 days ago
திருமங்கலம் : திருமங்கலம் ராயபாளையம் முக்தி நிலைய வளாகத்தில் உள்ள சத்ய யுக சிருஷ்டி கோயிலில் 7வது முறையாக நடந்த கும்பாபிஷேகத்தில் அர்த்தநாரீஸ்வரர், மீனாட்சி அம்மன், காசி விசாலாட்சி, குபேரலட்சுமி, கணபதி, அறுபடை வீடு முருகன்(திருச்செந்துார், திருப்பரங்குன்றம், பழனி, சோலைமலை, திருத்தணி, சுவாமிமலை முருகன் சிலைகள்), ஸ்ரீஓம்காரம் மற்றும் பாரிவார தெய்வங்களுக்கு நேற்று காலை புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிேஷகம் நடந்தது. சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. ஆசிரம தலைவி வசந்தசாயி, தலைமை நிர்வாகி வெங்கட்ராமன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.