உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமணீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

அமணீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

 பொள்ளாச்சி: பொள்ளாச்சி, தேவம்பாடி அமணீஸ்வரர் கோவிலில், இன்று (31ம் தேதி) திருவாசகம் முற்றோதல் துவக்கம் மற்றும் அன்னாபிேஷகம் நடக்கிறது.பொள்ளாச்சி, தேவம்பாடி வலசு அருகேயுள்ள பார்வதி தேவி, கங்கா தேவி உடனமர் அமணீஸ்வரர் கோவில் மிகவும் பழமையானது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஐப்பசி மாதத்தை முன்னிட்டு திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி இன்று துவங்குகிறது. மேலும், இறைவனுக்கு அன்னாபிேஷகம், பக்தர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடப்பதாக இந்து அறநிலைய துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !