வெள்ளாங்காட்டுபாளையம் கோவில் கும்பாபிஷேகம்
கோபிசெட்டிபாளையம்: கோபி, லக்கம்பட்டி, வெள்ளாங்காட்டுபாளையம் மேற்கு மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடக்கிறது.மே 22ம் தேதி துவங்கிய விழாவில், பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், 23ம் தேதி கணபதி ஹோமம், துர்கா ஹோமம், நவக்கிரஹ ஹோமம், அங்குரார்ப்பணம், கும்பலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று விசேஷ சாந்தி, பூதசுத்தி, மண்டபாரதனை, கலஸ பூஜை, கலசஸ்தாபனம், இண்டாம் கால யாக பூஜை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன பூஜை நடந்தது.இன்று காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம், நான்காம் கால யாகம், மண்டப பூஜை, வேதிகார்ச்சனை, நாடிசந்தானம், மகாபூர்ணாகுதி, யாத்ராதானம், கடம்புறப்பாடு, காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் மகா கும்பாபிஷேகம், தஸதரிசனம், மகா அபிஷேகம், மகா அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை அன்னதானம் நடக்கிறது.