சூலூர் சிவாலயங்களில் அன்னாபிஷேகம்
ADDED :2138 days ago
சூலூர்: சூலூர் வட்டார சிவன் கோவில் களில் நடந்த அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஜப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவன் கோவில்களில், அன்னாபிஷேக விழா நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் சூலூர் வட்டார கோவில்களில் இவ்விழா கோலாகலமாக நடந்தது. அன்னம் மற்றும் காய், கனிகளால் சிவபெருமான் அலங்கரிக்கப்பட்டு அலங்கார பூஜைகள் நடந்தன. அலங்காரம் கலைக்கப்பட்டு, அபிஷேக பூஜைக்குப்பின், அன்னம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. சூலூர் சிவன் கோவில், சின்னியம் பாளையம் கணபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.