மோதிரத்தில் இவ்ளோ இருக்கா!
ADDED :1828 days ago
ஒரு கோயில் மண்டபத்தில் உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. ரசிகர் ஒருவர், அதைக் கவனிக்காமல் அங்குமிங்கும் பார்த்தபடியே இருந்தார். அவர் முகத்தில் ஏதோ வருத்தம் தெரிந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவர் எழ வில்லை. விசாரித்தபோது," தான் அணிந்திருந்த ஒருபவுன் மோதிரம் தொலைந்து விட்டது. 30 வருஷமாக கையிலே போட்டிருந்தது என்றார். அவருடைய கவலை நியாயமானது தான். இவர் இப்படி கவலைப்பட்டாலும், "இத்தனை வருஷமாக அவருடைய விரலில் இருந்தேனே! மறுபடியும் அவரிடம் செல்லவேண்டுமே! என்ற கவலை மோதிரத்திற்கு ஏற்படுமா! அது விழுந்த இடத்தில் அப்படியே கிடக்கிறது. மோதிரத்தைத் தொலைத்தவரைப் போல பரமாத்மாவான கடவுளும், நம்மை பிரகிருதி மண்டலத்தில் (உலகம்) தொலைத்துவிட்டு கவலைப்படுகிறார். அந்த மோதிரத்தைப் போல நாமும் கடவுளை மறந்து விட்டு, உலக ஆசைகளில் சிக்கிக் கிடக்கிறோம்.