பெரிய பாளையத்தம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை
ADDED :1797 days ago
புதுச்சேரி; பெரிய பாளையத்தம்மன் கோவில் திருப்பணிகளை விரைவாக முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, கவர்னர், முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. சமத்துவம் சமூக விழிப்புணர்வு மையத்தின் தலைவர் ஹரிகரன் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி அண்ணா சாலையில் ராஜா தியேட்டர் அருகில் அமைந்துள்ள பெரிய பாளையத்தம்மன் கோவிலின் திருப்பணிகள் கடந்த 2014ம் ஆண்டு துவங்கியது. தொடர்ந்து, 2016ம் ஆண்டில் ராஜகோபுரம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு இதுவரை பணிகள் நிறைவு பெறவில்லை.முறைப்படி நிர்வாகிகள் நியமிக்கப்படாததாலும், இந்து சமய அறநிலையத் துறையின் மெத்தனப் போக்காலும் திருப்பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. கோவில் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.