உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜபெருமாள் கோவில் திருப்பணிக்கு பாலாலயம்

வரதராஜபெருமாள் கோவில் திருப்பணிக்கு பாலாலயம்

கடலுார்; கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிேஷக திருப்பணிக்காக பாலாலயம் நடந்தது.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிேஷகம் நடந்து 16 ஆண்டுகள் ஆனதால், கும்பாபிேஷகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, திருப்பணி வேலைகள் துவங்க நேற்று பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.பாலாலய பூஜைகள் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 7:00 மணி முதல் விமானங்கள், சக்தி ஆகர்ஷணம், கும்பஸ்தாபனமும், ஹோமங்கள், மகா பூர்ணாஹூதியும், விமான பாலாலய பிரதிஷ்டை, தீபாராதனை சாற்றுமறை நடந்தது.மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் தேரழுந்துார் கோசகன் பட்டாச்சாரியார் தலைமையில் பூஜைகள் நடந்தன.நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன், பாடலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சங்கர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ்பாபு, ஆய்வாளர் சுபத்ரா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !