பூ புத்தரி அறுவடை திருவிழா: பாரம்பரிய விழாவாக அறிவிக்க எதிர்பார்ப்பு!
கூடலூர்: கூடலூரில், நூற்றாண்டுகளாக கொண்டாடபடும் பூ புத்தரி எனப்படும், நெற்கதிர் அறுவடை திருவிழாவை தமிழகத்தின் பாரம்பரிய விழாவாக முதல்வர் அறிவிக்க பழங்குடி மக்கள் எதிர்பார்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியின் பூர்வ குடிகளான பனியர் இன பழங்குடி மக்கள்ஆண்டு தோறும் நெற் பயிர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், அறுவடைக்கு முன் பாரம்பரியமாக பூ புந்தரி எனப்படும், அறுவடை திருவிழாவை ஐப்பசி மாதம் 10 நாள் கொண்டாடி வருகின்றனர்.
புத்தூர்வயல் பகுதியில், வயலில் நடைபெறும் விழாவில பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன் விளக்கேற்றி பூஜை செய்து, நெற்கதிர் அறுவடை செய்துவது வழக்கம். தொடர்ந்து, நெற்கதிர் கட்டுகளை ஊர்வலம் வட்டபாறை பாகவதி அம்மன் கோவில் எடுத்து சென்று, சிறப்பு பூஜையுடன், பழங்குடி பெண்கள் பாரம்பரிய நடனமும் நடைபெறும். அங்கிருந்து, நெற்கதிர் கட்டுகள் முக்கிய கோவில்களுககு எடுத்து சென்று, அங்கு பூஜை செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டும். அதன் பின்பே நெல் அறுவடை நடைபெறும். பல நூற்றாண்டுகளாக பழமை மாறாமல் கொண்டாடப்பட்டு வரும், இவ்விழாவை, முதல்வர் தமிழகத்தின் பாரம்பரியம் விழாவாக அறிவித்தால், இவ்விழாவுக்கு, மிக பெரிய அங்கிகாரம் கிடைக்கும் என, பழங்குடி மக்கள் தெரிவித்தனர்.