உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயில் திருவிழா: 7 ஊர் சப்பரத்திருவிழா

முத்தாலம்மன் கோயில் திருவிழா: 7 ஊர் சப்பரத்திருவிழா

 டி.கல்லுபட்டி : டி. கல்லுப்பட்டியில் ஏழு ஊர் முத்தாலம்மன் கோயில் திருவிழா 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐப்பசி மாதம் கொண்டாடப்படும். நேற்று முன் தினம் திருவிழா துவங்கியது. கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலம்பட்டி, காடனேரி, கிளாங்குளம், சத்திரப்பட்டியில் இருந்து ஆறு சப்பரங்கள் செய்து வந்து முத்தாலம்மனை அம்மாபட்டியிலிருந்து அவரவர் ஊருக்கு எடுத்துச் சென்று வழிபடுவர். முத்தாலம்மனை தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தி, கல்லுப்பட்டியில் சரஸ்வதி, வன்னிவேலம் பட்டியில் மகாலட்சுமி, வை.அம்மாபட்டியில் பைரவி, காடனேரியில் திரிபுரசுந்தரி, கிளாங்குளத்தில் சபரி, கி.சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாக வழிபடுகின்றனர். சப்பரங்களை தலைச்சுமையாக கிராம மக்கள் சுமந்து தாய் கிராமமான அம்மாபட்டிக்கு ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி இன்று (நவ.,5) நடக்கிறது. இதையொட்டி மதுரை -  ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !