தி.மலை தீப திருவிழா விபரம் 2 நாட்களில் வெளியாகும்
ADDED :1801 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா, வரும், 17ல், நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவத்துடன், 20ல் தீப திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. 29ல், 2,668 அடி உயர மலையுச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.இந்நிலையில், தீப திருவிழாவுக்காக பூர்வாங்க பணிகள் எதுவும் தொடங்காத நிலையில், நேற்று, கோவிலில், சிவ பக்தர்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். தீப திருவிழா ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர் கந்தசாமியிடம் கேட்டபோது, இன்னும் இரண்டு நாளில், தீப திருவிழா குறித்து, முழு விபரமும் தெரிவிக்கிறேன். தற்போது வரை, விழா எப்படி நடத்துவது என்பது குறித்து, தெளிவான எந்த முடிவும் எடுக்கவில்லை, என்றார்.