உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாவூற்று வேலப்பர் கோயில் வளாகத்தில் துாய்மைப்பணிகள்

மாவூற்று வேலப்பர் கோயில் வளாகத்தில் துாய்மைப்பணிகள்

 ஆண்டிபட்டி : மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். ஆண்டுதோறும் சித்திரை மாதம் விழா நடைபெறும். மாதாந்திர கார்த்திகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் பூஜை செய்து வழிபடுவர். வளாகத்தில் கருப்பசாமி கோயிலில் துவங்கி வேலப்பர் சுவாமி சன்னதி, சுனை நீர் தேக்கம், சமுதாயக்கூட வளாகம் ஆகிய இடங்களின் நடை பாதையில் செடிகொடிகள், குப்பை அதிகம் இருந்தது. கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் ராசக்காபட்டி ஊராட்சி சார்பில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்களால் இப்பகுதியில் அவற்றை அகற்றி துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !