சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் வடுகபைரவர் பூஜை
ADDED :2165 days ago
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு யாக பூஜை தொடங்கியது. பகல் 12:00 மணிக்கு வடுக வைபரவருக்கு 16 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டது. அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் முன்னிலையில் ரவி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தினார்.பிரான்மலை மங்கைபாகர் கோயிலில் உள்ள வடுக பைரவருக்கும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது. முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் உள்ள கால பைரவருக்கு கிராம மக்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.