காரைக்கால் ஸ்ரீநித்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1876 days ago
காரைக்கால்; காரைக்கால் ஸ்ரீநித்தீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு தேய்பிறையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.காரைக்கால், ஸ்ரீநித்தீஸ்வரர் கோவிலில் தேய்பிறையை முன்னிட்டு நேற்று முன்தினம் ஸ்ரீபைரவி உடனுறை காலபைரவர் சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.அதனையொட்டி, பைரவருக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீபைரவருக்கு முத்தங்கி அலங்காரம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை மகா தீபாரனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.