உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையான அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிலை திருட்டு

பழமையான அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிலை திருட்டு

வெள்ளகோவில்: வெள்ளகோவில் கோவை ரோட்டில் 3 வது கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. கோவிலில் உள்ள மூலவர் அருகே 90 ஆண்டுகள் பழமையான வாய்ந்த அங்காள பரமேஸ்வரி உற்சவர் சிலை நேற்றிரவு திருடப்பட்டது.

அங்காள பரமேஸ்வரி சிலை வெண்கலமா? ஐம்பொன்னாலானதா? என அங்கு இருப்பவர்களுக்கே தெரியவில்லை. இச்சிலை 1931 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை எனவும் கூறுகின்றனர். கோவிலின் மேல்புறம் அருகில் குடும்பத்துடன் வசிக்கும் சின்னச்சாமி கதிர்வேல். 51. கோவில் பூசாரியாக உள்ளார். நேற்று இரவு பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். காலை 6.30 மணி அளவில் வந்து பார்த்த போது அங்காள பரமேஸ்வரி சிலை திருட்டு போனது தெரிய வந்துள்ளது.

கோவிலின் பின்புற காம்பவுண்ட் சுவர் ஏறி, பின்பக்க கேட் 2 பூட்டை உடைத்து, கர்ப்பகிரகத்தில் உள்ள கிரில் பூட்டை உடைத்து, மேலும் மரக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே பீடத்திலிருந்த சுவாமி சிலையை திருடி உள்ளனர். கோவிலின் முன் உள்ள உண்டியல் உடைக்கப்படவில்லை, கோவிலில் கேமரா இல்லாதது திருடர்களுக்கு சாதகமானது. திருடர்கள் உடைக்கப்பட்ட பூட்டு மட்டும் கம்பிகளை போலீசார் கைப்பற்றினர். சம்பவ இடத்திற்கு மாவட்ட கைரேகை பதிவு டி.எஸ்.பி., சுப்பிரமணி தலைமையிலான எஸ்.ஐக்கள் மணிகண்டன் செல்வராஜ், ஆகியோர் கைரேகையை பதிவு செய்து சென்றனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., கந்தசாமி தலைமை காவலர் சந்திரகுமார், மாவட்ட குற்றப்பிரிவு எஸ்.ஐ. மற்றும் காங்கேயம் டி.எஸ்.பி., தனராசு வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ., விஜயபாஸ்கர் ஆகியோர் விசாரித்தனர். வெள்ளகோவில் பகுதியில் கோவிலில் பூட்டை உடைத்து சிலை திருட்டு போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !