உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 90 ஆண்டு பழமையான அம்மன் சிலை திருட்டு

90 ஆண்டு பழமையான அம்மன் சிலை திருட்டு

வெள்ளகோவில்: திருப்பூர் அருகே கோவிலில், அம்மன் சிலை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில், 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது.


கோவில் பூசாரி, சின்னசாமி கதிர்வேல், வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு, கோவிலை பூட்டி சென்றார்.நேற்று காலை, 6.30 மணிக்கு வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளேயிருந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் சிலை திருட்டு போனது தெரிந்தது. உடனே, அவர் வெள்ளகோவில் போலீசார் புகார் செய்தார்.டி.எஸ்.பி., தன்ராஜ், இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கோவிலுக்கு சென்று விசாரித்தனர். தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.போலீசார் கூறுகையில், 90 ஆண்டு பழமையான, ஐம்பொன்னாலான ஒன்றரை அடி உயரமுள்ள, அம்மன் சிலையை திருடி சென்றுள்ளனர். கோவிலின் பின்புற சுற்றுச்சுவர் ஏறி, கேட் பூட்டு உடைத்து, கர்ப்பகிரகத்தில் இருந்த சிலையை திருடி சென்றுள்ளனர். ஆனால், உண்டியல் உடைக்கப்படவில்லை. சிசிடிவி கேமரா இல்லாதது திருடர்களுக்கு சாதகமாகி விட்டது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !