உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளி குமாரசாமி கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை

காளி குமாரசாமி கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை

திருப்பூர்: பலவஞ்சிபாளையம் காளிகுமார சுவாமி கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை நடந்தது. திருப்பூர், வீரபாண்டி ரிங் ரோடு, பலவஞ்சிபாளையத்தில், காளிகுமார சுவாமி, காளியம்மன் மற்றும் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை அதிகாலை சத்ரு சம்ஹார திரிசதி பூஜை நடத்தப்படுகிறது.குழந்தை பேறு, கல்வி அறிவு, சிறக்க, குடும்ப நலம் பெற, நோய்கள் மறையவும், திருமண தடை நீங்கவும், எண்ணிய காரியங்கள் நிறைவேறவும் முருகப்பெருமானுக்கு இச்சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. நேற்று நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு அபிேஷகம், ராஜ அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !