உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரூர் ஐயப்பன் கோவிலில் வருடாபிஷேக விழா

அரூர் ஐயப்பன் கோவிலில் வருடாபிஷேக விழா

அரூர்: அரூரிலுள்ள ஐயப்பன் கோவிலில், வருடாபிஷேக விழா நடந்தது. அரூர், நான்குரோட்டிலுள்ள, ஐயப்பன் கோவிலில் வருடாபிஷேக விழா, இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாளான, நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், சங்காபிஷேகம், கலசாபிஷேகம், தொடர்ந்து, சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம் நடந்தது. நேற்று, சுவாமிக்கு வருடாபிஷேகமும், சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !