நடராஜர், கிருஷ்ணர் படம் இருந்தால் வீடு ஆடிப் போகும் என்கிறார்களே...!
ADDED :1890 days ago
தில்லை வனத்தில் தவமிருந்ததன் பயனாக புலிக்கால் முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் நடராஜரின் நடன தரிசனம் கிடைத்தது. புல்லாங்குழல் இசைத்தபடி கிருஷ்ணர் பசுக்களை மேய்த்தார். அதைக் கேட்டதன் பயனாக ‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்களாக’ அவை பாலைச் சொரிந்தன. நடராஜர், கிருஷ்ணர் படங்கள் இருக்குமிடத்தில் துன்பங்கள் எல்லாம் ஆடிப் போகும் என்பதால் தாராளமாக வழிபடுங்கள்.