உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்பாத்தியில் முதல் நாள் தேர் திருவிழா: சிறப்பு பூஜை

கல்பாத்தியில் முதல் நாள் தேர் திருவிழா: சிறப்பு பூஜை

பாலக்காடு: கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி சடங்குகள் மட்டுமாக கல்பாத்தி ஒன்றாம் தேதி திருநாள் நேற்று கொண்டாடின.

கேரள பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர். இங்கு எல்லா ஆண்டும் ஐப்பசி மாத இறுதியில் தேர் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு தேர் திருவிழா கொரோனா தொற்று பரவல் காரணமாக மாவட்டத்தில் 144 தடை உத்தரவை உள்ளதா திருவிழா கோவில் சடங்குகளாக மட்டும் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி. இதையடுத்து திருவிழாவை கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில் திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் தீர்மானித்தனர். கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவின் ஒன்றாம் தேர் திருநாள் நேற்று நடந்தது. 9:30 மணி அளவில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலின் விஸ்வநாத சுவாமி, சுப்பிரமணியர், கணபதி ஆகிய தேவ கணங்களை சிறு பல்லக்கில் கோவில் வளாகத்தினுள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5 மணிக்கும் தேவகணங்கள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

தவிர காலையிலும் மாலையிலும் விழா கொண்டாடும் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில், பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், மந்தக்கரை மஹா கணபதி, சாத்தபுரம் பிரசன்ன மஹாகணபதி ஆகிய கோவில்களில் தேவராயன் நடந்தது. இரண்டாம் தேதி திருநாளாக இன்று மந்தக்கரை மகா கணபதி கோவிலில் 9:30 மணி அளவில் மூலவர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றன. மூன்றாம் தேர் திருநாள் நாளில் நடைபெறுகின்றன. 16ம் தேதி துவஜாவரோகணத்துடன் தேர்த் திருவிழா நிறைவடைகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !