ஒரே நாளில் ரூ. 3.26 கோடி திருப்பதி கோவிலில் வசூல்
ADDED :1795 days ago
திருப்பதி: கொரோனா விதிமுறைகள் அமலில் இருந்தபோதும், திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவில் உண்டியலில், நேற்று முன்தினம், 3.26 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன், திருமலை ஏழுமலையானை, தற்போது பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு நாளில், 30 ஆயிரம் பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசிப்பதற்கு, தேவஸ்தானம் அனுமதிக்கிறது.அதனால், லட்சங்களில் வசூலாகி வந்த உண்டியல் வருவாய், மெதுவாக கோடியை தொட்டது. அதற்கு பின், இரண்டு கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூலானது. ஆனால், நேற்று முன்தினம் பக்தர்கள் உண்டியலில் சமர்ப்பித்த காணிக்கையை கணக்கிட்ட போது, கொரோனா சமயத்தில் என்றும் இல்லாத நிகழ்வாக, 3.26 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.கடந்த எட்டு மாதத்தில், நேற்று முன் தினம் தான், திருமலை உண்டியல் வசூல், மிகவும் அதிகரித்துள்ளது.