குருவித்துறையில் குருபெயர்ச்சி விழா: பக்தர்கள் தரிசனம்
ADDED :1795 days ago
சோழவந்தான் : குருவித்துறை குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது
நேற்று(நவ.,15) இரவு 9.48 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குரு பகவான் இடபெயர்ச்சியாகினார். இதை முன்னிட்டு அனைத்து ராசிகாரர்களுக்கும் பரிகார பூஜையாக நவ.,13 காலை 9.30 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி, நவ.,14ம் தேதி இரவு 7.00 மணிக்கு முடிந்தது. குருபெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று 15ம் தேதி ஞாயிறு இரவு 7.48 மணி முதல் 9.48 வரை பரிஹார மஹாயாஹம், திருமஞ்சன சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, வழிகாட்டு நெறிமுறை விதிகளின்படி பக்தர்கள் வரிசையில் நின்று, குருபகவானை தரிசித்தனர்.