உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலுார் கோவில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

திருக்கோவிலுார் கோவில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

திருக்கோவிலுார் : தீபாவளியை முன்னிட்டு திருக்கோவிலுாரில் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து, புத்தாடை உடுத்தி, வெடி வெடித்து, கோவில்களுக்கு சென்றனர்.நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் உலகளந்த பெருமாள்கோவில், அட்டவீரட்டானத்தில் இரண்டாவது தலமான வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.வீரட்டானேஸ்வரர் கோவிலில் காலை 8:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. சிவானந்தவல்லி சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில்களில் பக்தர்களின் கூட்டம் காலை முதலே அதிகமாக காணப்பட்டாலும் தனி மனித இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !