ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு பூஜை
ராமேஸ்வரம்; தீபாவளியை யொட்டி ராமேஸ்வரம் கோயிலுக்கு வெளியூர், உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்தனர். கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.பக்தர்கள் வருகையையொட்டி கோயில் ஊழியர்கள், கொரோனா தொற்று பரவாமல் இருக்க பக்தர்கள் சமூக இடைவெளியுடனும், முககவசம் அணிந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்களில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை, மாலையில் நடந்த தீபாராதனைகளில் பக்தர்கள் குடும்பத்துடன் சென்று விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.கடலில் புனித நீராடல்: தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடலில் நேற்று ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் அங்குள்ள கடலில் புனித நீராடினர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பின் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சகலதீர்த்தமுடையவர் கோயிலில் தரிசனம் செய்தனர்.