ஆத்தூர் கோவில்களில் குரு பெயர்ச்சி விழா
ADDED :1802 days ago
ஆத்தூர்: ஆத்தூர் பகுதி கோவில்களில், நேற்றிரவு நடந்த குரு பெயர்ச்சி விழாவில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. நேற்றிரவு, 9:48 மணிக்கு, தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு பெயர்ச்சியானார். இதையொட்டி, குரு பகவானுக்கு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதேபோல், ஆத்தூர் கைலாசநாதர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை, வெகு விமரிசையாக நடந்தது.