உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்துார்பேட்டை குரு பகவானுக்கு சிறப்பு ஆராதனை

உளுந்துார்பேட்டை குரு பகவானுக்கு சிறப்பு ஆராதனை

 உளுந்துார்பேட்டை: குருபெயர்ச்சியையொட்டி, உளுந்துார்பேட்டை கைலாசநாதர் கோவிலில் குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குருபெயர்ச்சியையொட்டி, உளுந்துார்பேட்டை, கைலாசநாதர் கோவிலில் உள்ள குரு பகவானுக்கு நேற்று முன்தினம் இரவு 9:40 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


சங்கராபுரம்: சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள குருபகவானுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று சங்கராபுரம் வாசவி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள குருபகவான், தேவ பாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


சின்னசேலம்: சின்னசேலம் சிவன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணி முதல் 9:30 மணி வரை குரு பகவானுக்கு அபிேஷக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதேபோன்று கன்னிகா பரமேஸ்வரி கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !