42 அடி ராஜகாளியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம்
ADDED :1796 days ago
செஞ்சி; சத்தியமங்கலத்தில் 42 அடி ராஜகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சியை அடுத்த சத்தியமங்கலத்தில் புதிதாக 42 அடி உயரத்தில் ராஜகாளியம்மன் சிலை அமைத்துள்ளனர். இதன் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 19ம் தேதி மாலை யாகசாலை பிரவேசம், பிரவேச பலி, கும்ப அலங்காரம், வாஸ்த்து சாந்தி, கணபதி பூஜை ஆகியன நடந்தது.நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை, விக்னேஷ்வர பூஜை, விசேஷ திரவிய ஹோமம் நடந்தது. 9.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும் தொடர்ந்து கடம் புறப்பாடும் நடந்தது. 9.45 மணிக்கு ராஜகாளியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.