உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானி சங்கமேஸ்வரர் கோவில் தேருக்கு சக்கரம்

பவானி சங்கமேஸ்வரர் கோவில் தேருக்கு சக்கரம்

பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவில், தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. கோவிலில் சித்திரை மாதத்தில், தேரோட்டம் நடக்கிறது. தேர் சேதமடைந்ததால், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், சிற்பத்தேர் செய்யும் பணி, மூன்றாண்டுகளுக்கு முன் தொடங்கியது. சேலம் மாவட்டம், தம்மம்பட்டியை சேர்ந்த கலைஞர்கள் தேரை தயாரித்தனர். ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வில், அளவிலும், எடையிலும் அதிகமாக இருந்தது. பழைய தேரின் சக்கரத்தை பொருத்த முடியாததால், புதிய சக்கரம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆறரை அடி அகலத்தில், இரண்டு சக்கரங்களை, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் தயாரிக்க, திருச்சியை சேர்ந்த நிறுவனம் ஒப்பந்தம் பெற்றது. சக்கரங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், இயந்திர உதவியுடன் நேற்று பொருத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !