திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2ம் நாள் உற்சவம்
ADDED :1792 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப விழாவில் இரண்டாவது நாளான நேற்று காலை உற்சவத்தில், ஆயிரம்கால் மண்டபம் முன் விமானங்களில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், மற்றும் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் ஆயிரங்கால் மண்டபம் அருகே பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவை முன்னிட்டு, கோவிலின் ஒன்பது கோபுரங்களும் வண்ண விளக்கு ஓளியில் ஜொலித்தது.