பரமக்குடியில் கந்த சஷ்டி திருக்கல்யாணம்
ADDED :1846 days ago
பரமக்குடி: பரமக்குடி தரைப் பாலம் அருகில் உள்ள வள்ளி - தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் நடந்தது.
இக்கோயிலில் நவ.,15 அன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. தினமும் உற்ஸவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் இரவு சூரபத்மனை அழிக்கும்சூரசம்ஹார லீலை வைகை ஆற்றின் கரையில் நடந்தது.நேற்று காலை 10:30 மணிக்கு மேல் வள்ளி, தெய்வானை - சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.