உடுமலை ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியில் சிறப்பு பூஜை
ADDED :1837 days ago
உடுமலை : சாய்பாபா அவதார புருஷராகவும் ஆன்மிக குருவாகவும் போற்றப்படுபவர். இந்தியாமட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள் மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். இவருடைய பெயரில் 1200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகெங்கிலும் செயல்படுகின்றன. இன்று (நவ., 23) சாய்பாபாவின் 94வது அவதார நாள் கொண்டாடப்படுகிறது. சத்ய சாய் பாபா பிறந்த நாளையொட்டி உடுமலை ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியில் சாய் பாபா படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களாக வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.