முடியனூர் கைலாசநாதர் கோவிலில் உழவாரப்பணி
ADDED :1892 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த முடியனூர் கிராமத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலில், தொண்ட உழவர் திருக்கூட்டம் சார்பில் உழவார பணி மேற்கொள்ளப்பட்டது.
திருக்கோவிலூர் அடுத்த முடியனூர் கிராமத்தில் மிகப்பழமையான கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இதனை தொண்ட உழவர் திருக்கூட்டம் அறக்கட்டளை தலைவர் சிவபாலன் தலைமையிலான சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டு, நேற்று உழவாரப் பணி மேற்கொண்டனர். முன்னதாக கோவில் விரைவில் திருப்பணி நடைபெற்று, குடமுழுக்கு விழா நடைபெற இறைவனிடம் விண்ணப்பம் செய்து, திருமுறைகள் பாடி வழிபாடு செய்யப்பட்டது. தகடி கிராமத்தைச் சேர்ந்த சிவ ஐயப்பன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள், சிவனடியார்கள் உழவாரப்பணி திருக்கூட்டத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.