உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: தருமபுரம் ஆதீனம் தரிசனம்

மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: தருமபுரம் ஆதீனம் தரிசனம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் மற்றும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மேல நாஞ்சில் நாட்டில் பழமையான முத்தாட்சி அம்மன் கோயில் உள்ளது. முத்தாட்சி அம்மனை  ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். சிறப்புமிக்க இக்கோவிலுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, திருப்பணிகள்  செய்து முடிக்கப்பட்டு. கும்பாபிஷேக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி, 4 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக தினமான இன்று காலை, 4-ஆம் கால யாகசாலை பூஜை, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்று பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து, விமானத்தை  அடைந்தன. அங்கு மங்கள வாத்தியம் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள்  செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !