கங்காதீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் சிவனடியார்கள் பரவசம்
ADDED :2 days ago
அவிநாசி: கருவலுரிலுள்ள கங்காதீஸ்வரர் கோவிலில் அவிநாசி சைவ மகாசபை மற்றும் திருமுருகன் ஸ்பின்னிங் மில்ஸ் சார்பில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, முன்னதாக கணபதி ஹோமம் நடைபெற்றது. மாணிக்கவாசகரின் அடியார்கள் சித்ரா தலைமையில், சிறப்பு விருந்தினராக நந்தீஸ்வரி பங்கேற்றார். திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, கங்காதீஸ்வர பெருமானுக்கு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்று பரம்பொருளை வழிபட்டனர்.