அருணாசலேஸ்வரர் கோவிலில் 1008 சங்கு அபிஷேகம்
ADDED :2142 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப விழாவில் மூன்றாம் நாளான நேற்று உலக நன்மைக்காக சுவாமி சன்னதி முன் 1008 சங்கு அபிஷேக சிறப்பு யாக பூஜை நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் மூன்றாம் நாளான நேற்று காலை உற்சவத்தில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, உள்பிரஹாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். உலக நன்மைக்காக சுவாமி சன்னதி முன் 1008 சங்கு அபிஷேக சிறப்பு யாக பூஜை நடந்தது. கோவில் தங்க கொடிமரம் அருகே வெள்ளி உண்டியல் (பிராத்தனை உண்டியல்) வைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.