உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாஸ்திரம் பின்பற்றினால் மண வாழ்க்கை சிறப்பு

சாஸ்திரம் பின்பற்றினால் மண வாழ்க்கை சிறப்பு

கோவை: கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில், திருச்சி கல்யாணராமனின் ராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வருகிறது.

‘ஸ்ரீ சீதா கல்யாணம்’ என்ற தலைப்பில் நேற்று நடந்த சொற்பொழிவில் அவர் பேசியதாவது:

ராமர் வில்லை வளைத்த பின், மிதிலையில் சீதா கல்யாண வைபோகம் நடக்கிறது. ஜனக மகராஜா தன் மகள் சீதையை ராமருக்கு கன்னிகாதானம் செய்து கொடுத்தார். அப்போது அவர், ‘‘என் மகள் சீதை, காலை சூரிய உதயத்தின்போது, உன் நிழல் பின்னால் வருவது போல் பின் தொடர்ந்து வருவாள். மதிய வேளையில் உன் நிழல் உடன் சேர்ந்து வருவது போல் வருவாள். மாலை நேரத்தில் உன் நிழல் முன்னே செல்வது போல், உன் முன் செல்வாள்,’’ என்றார்.

அந்த காலத்தில் ஹிந்துக்களின் திருமணத்தில் கன்னிகாதானம் தான் முக்கிய அம்சமாக இருந்தது. பிற்காலத்தில்தான் மாங்கல்யம் அணியும் பழக்கம் வந்தது.

ஹிந்துக்களின் கல்யாணத்தின்போது கடைபிடிக்கும் சாஸ்திர, சம்பிரதாயங்கள் அனைத்தும் அர்த்தம் உள்ளவை. நாம் அதை மாற்றாமல் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !