நவசக்தி வாராஹி அம்மன் கோயிலில் மகாவராஹி யாகம்
ADDED :38 minutes ago
தொண்டி: தொண்டி அருகே விஸ்வநாதயேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நவசக்தி வராஹி அம்மன் கோயிலில் நேற்று மகாவராஹி யாகம் நடந்தது.
வேலுார் வராஹி ஷேத்திரத்தின் பீடாதிபதி வராஹ குருஜி தலைமையில் இந்த யாகம் நடந்தது. திரவியங்கள், மூலிகைகளை, நவதானியங்கள் யாகத்தில் இட்டு வேதமந்திரங்கள் முழங்க பூஜை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.