கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :62 days ago
சின்னசேலம் : சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி 2வது வெள்ளியை முன்னிட்டு சக்தி வனேஷ்வரர் பூஜை மற்றும் 108 லிங்கம் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
திருமண தடைகள் நீங்கவும், பிரிந்த தம்பதியர் மீண்டு சேரவும், கணவன் மனைவி உறவு பலப்படவும் நடத்தப்பட்ட இந்த பூஜையில், சுவாமிக்கு சொர்ண பூஜை, சக்திவனேஷ்வரர் பூஜை, துர்க்கை பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அர்ச்சகர் குமார் சர்மா பூஜைகளை செய்தார்.