கள்ளக்குறிச்சியில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1778 days ago
கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சியில் வள்ளி தெய்வானை சுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.ராஜா நகர், கணபதி கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவஜனம், அங்குரார்பணம், காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை சுப்ரமணியர் சாமிகளுக்கு மாலை மாற்றி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.