திருவண்ணாமலை தீபம்: வெள்ளி விமானத்தில் பஞ்சமூர்த்திகள் வலம்
ADDED :1874 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவின், நான்காம் நாளான நேற்று காலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை, 11:00 மணியளவில், விநாயகர், சந்திரசேகரர், ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், 5ம் பிரகாரத்தில் உலா வந்தனர். இதை தொடர்ந்து நேற்றிரவு, பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வெள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், ஆகிய பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானத்தில், வலம் வந்தனர். கொரோனா கட்டுப்பாடு விதிகள் காரணமாக, சுவாமி வீதி உலாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.