ஏகாம்பரநாதர் கோவிலில் ஜூன் 1ல் கும்பாபிஷேகம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொல்லங்கோவில், தாண்டாம்பாளையம் காமாட்சி அம்மன் உடனமர் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம், ஜூன், 1ம் தேதி நடக்கிறது.ஈரோடு அருகே சிவகிரி தாண்டாம்பாளையத்தில் பழமையான காமாட்சியம்மன் ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், ரத்தினவிநாயகர், சுப்பிரமணியர் கோவில்களில் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியவை பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது.இக்கோவிலின் ஐந்தாவது மகா கும்பாபிஷேகம் ஜூன், 1ம் தேதி நடக்கிறது. முன்னதாக மே, 29ம் தேதி காலை, 5 மணிக்கு, மகா கணபதி ஹோமம், சுப்ரமண்ய, மூர்த்தி, நவக்கிரக ஹோமங்கள் நடக்கிறது. நண்பகல், 12 மணிக்கு மஹாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை, 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, தீபாராதனை நடக்கிறது.வரும், 30ம் தேதி காலை, 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கஜபூஜை, கோ பூஜை, அஷ்வ பூஜை, 4 மணிக்கு அங்குரார்ப்பணம், கும்பாலங்கரம், கலாகர்ஷணம் உள்பட பல பூஜைகள் நடக்கிறது. 31ம் தேதி காலை, 8 மணிக்கு பூதசுத்தி, பாவனாபிஷேகம், சங்க்யா ஹோமம், மதியம், 12.45க்கு விமான கலசங்கள் பிரதிஷ்டை செய்தல், மாலை, 5 மணிக்கு மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, மூவிலை சூலம் நடக்கிறது.ஜூன், 1ம் தேதி காலை, 3.30க்கு விக்னேஸ்வர பூஜை, பிம்பரஷாந்தனம், காலை, 5 மணிக்கு தத்வார்ச்சனை மஹா தீபாராதனை, ஆலயம் வலம் வருதல் நடக்கிறது. காலை, 5.30க்கு பரிவார விமானங்கள், காமாட்சி உடனமர் ஏகாம்பரநாதர் விமானம், மூலவர் விக்ரஹங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 8.30க்கு தசதானம், தசதரிசனம், மஹா அபிஷேகம், பிரசாதம் வழங்கல், காலை, 7 மணிக்கு அன்னதானம், மாலை, 4 மணிக்கு நடராஜ பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7 மணிக்கு காமாட்சி அம்மன் வீதி உலா நடக்கிறது. தலைவர் சண்முகம், செயலாளர் குழந்தைவேல், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.