உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவில் கட்ட மதகடிப்பட்டில் பூமி பூஜை

அங்காளம்மன் கோவில் கட்ட மதகடிப்பட்டில் பூமி பூஜை

திருபுவனை: மதகடிப்பட்டில் ரூ.1.25 கோடி செலவில் கட்டப்பட உள்ள அங்காளம்மன் கோவில் திருப்­பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நட ந்தது. மதகடிப்பட்டில் 300ஆண்டுகள் பழமையான அங்காளம்மன் கோவில் உள்ளது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவில் திருப்பணியை மேற்கொள்ள கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி ரூ.1.25கோடி செலவில் தற்போதுள்ள, கோவிலுக்கு பின்புறம் விசாலமான பரப்பளவில் புதிதாக கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நேற்று நட ந்தது. விழாவிற்கு திருப்பணிக்குழு தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மணி, துரை வேந்தன், சிவக்குமார், ஆனந்தன், உதயன், கண்­ணன், ராஜ குரு, ராமச்சந்திரன், சரவணமூர்த்தி முன்னிலை வகித்தனர். தேவஸ்தான சிறப்பு அதிகாரிசுகுமார் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்­டனர். புதிதாக கட்டப்பட உள்ள கோவிலில் ராஜ கோபுரம், முன்மண்டபம், வினாயகர், பா லமுருகன், அங்காளம்மன், பாவாடைராயன், துர்கையம்மன் மற்றும் நவகிரக சன்னதிகள் சுற்றுச்சுவருடன் அமைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !