மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
1774 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
1774 days ago
குன்னுார்:குன்னுார் எல்லநள்ளி சாய் கைலாஷில் சத்ய சாய்பாபாவின், 95வது பிறந்தநாள் விழா சிறப்பு பூஜைகளுடன் நடந்தது.குன்னுார்- ஊட்டி சாலை எல்லநள்ளி அருகே அமைந்துள்ள சாய் கைலாஷில், நேற்று அதிகாலை, ஓம்காரம், சுப்ரபாதம், அஷ்டோத்திரம் ஆகியவை இடம் பெற்றது. உலகம், கொரோனாவில் இருந்து மீளவும், உலகம் முழுவதும் சுபிட்ஷம் பெறவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அரசின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. பஜனை இல்லாததால், மாவட்டத்தில் உள்ள அனைத்து சாய் பக்தர்களின் வீடுகளில், சிறப்பு பூஜைகள் நடத்தி பிரார்த்தனை செய்யப்பட்டன. நீலகிரி மாவட்ட சத்ய சாய் சேவா தலைவர் சுந்தர்ராஜ் கூறுகையில், சுவாமியின் பிறந்த நாளில், உலக நன்மைக்காகவும், கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் மீளவும்; நம் நாட்டை சூழ்ந்துள்ள அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வரவும், பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது, என்றார்.
1774 days ago
1774 days ago