உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறநிலைய துறையில் புதிதாக 9 ஆபீஸ்கள்

அறநிலைய துறையில் புதிதாக 9 ஆபீஸ்கள்

 சென்னை : ஹிந்து சமய அறநிலைய துறையில், ௯ கோடி ரூபாயில், ஒன்பது இணை ஆணையர் அலுவலகங்கள் மற்றும், 171 பணியிடங்கள் ஏற்படுத்த, அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு, நாகப்பட்டினம், திருப்பூர், திண்டுக்கல், துாத்துக்குடி, கடலுார் என, ஒன்பது இடங்களில் இணை ஆணையர் அலுவலகங்கள் துவக்கப்பட உள்ளன.புதிய அலுவலகங்கள் இயங்குவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய, ஒவ்வொரு இணை ஆணையர் அலுவலகத்திற்கும், ஒரு பொறுப்பு அலுவலர், ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமித்து, அறநிலையத் துறை கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !