உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகிரிநாத ஸ்வாமி திருவிழா கொடியேற்றம்

அழகிரிநாத ஸ்வாமி திருவிழா கொடியேற்றம்

சேலம்: சேலம், அழகிரிநாத ஸ்வாமி கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று கொடியேற்று விழா நடந்தது.சேலம், கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவிலில், ஜூன் 4ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று கோவிலில் கொடியேற்று விழா நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை வெள்ளி பல்லக்கு உற்சவம் நடக்கிறது. மாலையில், சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். நாளை மாலை ஹனுமந்த வாகனத்தில் உலா வருகிறார். வரும் 31ம் தேதி மதியம் 12 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஜூன் 2ம் தேதி புஷ்பக வாகனம், 3ம் தேதி குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது. ஜூன் 4ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, சேலம் கலெக்டர் மகரபூஷணம், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் மஹாலி, மேயர் சவுண்டப்பன், சேலம் எம்.பி., செம்மலை உள்பட பலர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !